Tuesday, December 4, 2007

ரயில் தொழிற்சங்க வெற்றி

ரயில்வே சங்க அங்கீகார தேர்தல் டிஆர்இயு மகத்தான வெற்றி பொன்மலை வீர தியாகிகளுக்கு சமர்ப்பணம்: டி.கே.ரங்கராஜன்

சென்னை, டிச.3-

ரயில்வே தொழிற்சங்க அங் கீகாரத்திற்கான தேர்தலில் சிஐடியு தலைமையிலான தட் சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ரகசிய வாக்கெடுப்பில் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் டிஆர்இயு சங்கத்திற்கு அங்கீ காரத்தைப் பெற்றுத் தந்துள் ளனர். ஏற்கெனவே ரகசிய வாக் கெடுப்பு மூலமே அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் வெற்றி பெற்ற டிஆர்இயு, தேர்தலிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள்

தெற்கு ரயில்வேயின் சி,டி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாக்காளர் கள் ஆவர். மொத்த வாக்குகள் 98,189 ஆகும். கடந்த நவ.26, 27, 28 தேதிகளில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 92,811 வாக் குகள் (94.6 சதவீதம்) பதிவா கின. இதில் டிஆர்இயு பெற்ற வாக்குகள் 30,094 (30.64 சத வீதம்). ஏற்கெனவே நிர்வாக ஒத் துழைப்பால் அங்கீகார சங்க மாக இருந்து வந்த எஸ்ஆர் எம்யு, அரசியல் களத்தில் முத லாளித்துவ கட்சிகள் செய் வதுபோல பெரும் பணத்தை இறக்கி விட்டு 35,530 (36.18 சதவீதம்) வாக்குகளை பெற் றது. அங்கீகாரத்திற்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை யில் 30 சதவீதம் தேவை என்ற நிலையில் இந்த இரண்டு சங்கங் களும் அங்கீகாரம் பெறுகின்றன.

நிர்வாக ஒத்துழைப்போடு அங்கீகாரம் பெற்று வந்த மற் றொரு சங்கமாகிய ஐஎன்டியுசி தலைமையிலான எஸ்ஆர் இஎஸ் இத்தேர்தலில் 23,637 (24.07 சதவீதம்) வாக்குகளை மட்டுமே பெற்று தனது அங்கீ காரத்தை இழக்கிறது.

நியாயமான கோரிக்கை

ரயில்வே தொழிற்சங்க அங் கீகாரத்தை ரகசிய வாக்கெடுப்பு அடிப்படையிலேயே வழங்க வேண்டும் என்று டிஆர்இயு மட் டும்தான் வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட் டங்களையும் சங்கம் நடத்தி யது. ஆனால் ரயில்வே நிர்வா கம் இதனை ஏற்காமலே இருந் தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2003 அக்டோ பர் 17 அன்று உயர்நீதிமன்றம் ரகசிய வாக்கெடுப்பு மூலமே அங்கீகாரம் வழங்கப்பட வேண் டும் என்று தீர்ப்பளித்தது.

ரயில்வே நிர்வாகமும், எஸ்ஆர்எம்யு, எஸ்ஆர்இஎஸ் ஆகிய இரண்டு `நிர்வாக அங்கீ கார' சங்கங்களும் அதை எதிர்த்து மேல் முறையீடு செய் தன. அகில இந்திய அளவில் அனைத்து ரயில்வேக்களிலும் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது பொதுத் தேர்தலைப் போன்றது தான், அதனால் பெரும் பணச் செலவு ஏற்படும், மோதல்கள் ஏற்படும் என்றெல்லாம் நிர்வா கம் சாக்குப் போக்குகளைச் சொன்னது. இரண்டு `நிர்வாக அங்கீகார' சங்கங்களும் உறுப் பினர் பதிவு அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட வேண் டும் என வாதிட்டன.

உச்சநீதிமன்றம் 2004 மார்ச் 8 அன்று அளித்த முக்கி யத்துவம் வாய்ந்த தீர்ப்பில், நிர்வாகம் மற்றும் இரண்டு `நிர் வாக அங்கீகார' சங்கங்களின் வாதங்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. ரகசிய வாக்கெடுப்பு மூலமே அங்கீகாரத்திற்கான சங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவாக ஆணையிட்டது.

முக்கிய வெற்றி

அதன் பிறகும் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் பல வகைக ளில் இழுத்தடிக்க முயற்சிகள் நடந்தன. இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. முதலில் ரகசிய வாக்கெடுப்பிற்கான கோரிக் கையில் வெற்றி பெற்ற டிஆர் இயு, மற்ற இரண்டு சங்கங் களின் பெரும் பணம், பல்வேறு உத்திகள் போன்றவற்றை எதிர் கொண்டு இந்த தேர்தல் வெற்றி யையும் சாதித்துள்ளது. அந்த சங்கங்களின் பண பலத்தோடு ஒப்பிடுகையில் சிஐடியு சார்ந்த சங்கத்திற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி மகத்தானதாகும்.

"இது தொழிலாளர்களின் வெற்றி, நியாயமான கோரிக் கைக்கான போராட்டத்தின் வெற்றி," என்று டிஆர்இயு பொதுச் செயலாளர் அ.ஜானகி ராமன் கூறினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதி லிருந்தே டிஆர்இயு கொள்கைப் பூர்வமான பிரச்சார இயக் கத்தை தொடங்கிவிட்டது. சிஐ டியு தலைவர்கள் தமிழகம், கேர ளம், ஆந்திரா ஆகிய தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிக ளில் தொழிலாளர்களை சந் தித்து பிரச்சாரம் செய்தனர். இது வரை வேறு வழிகளில் அங்கீ காரம் பெற்று வந்த சங்கங்கள் வன்முறைகளை தூண்டக் கூடும் என்ற எதிர்பார்ப்புடன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் டிஆர்இயு கோரியது. அதன்படி பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக் கையும் நடந்தன. எனவே, இந் தத் தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்கும் டிஆர் இயு சங்கம்தான் காரணமானது என்று சங்கத்தின் மூத்த தலை வர் பி.வி.ராம்தாஸ் கூறினார்.

1 comments:

Thanjavurkaran said...

எங்க அப்பா தஞ்சாவூர் Branch SRES Secreary ஆக 15 வருடம் இருந்தார்.
SRMU DREU இக்கு எல்லாம் அப்போது மவுசு கிடையாது . மறைந்த எங்க அப்பா ஞாபகம் வருது இரண்டு நாளா