Friday, October 26, 2007

123 அமெரிக்க கெடு

ஒரு வழியா ஆட்சிக்கு பயந்து நம்ம காங்கிரஸ் கட்சி அணு ஆயுத ஒப்பந்தத்தை
கைவிடனும்கற முடிவுக்கு வந்துடுச்சிம். இந்த நேரத்துல வடிவேலு பானியில அமெரிக்க
நாடு இந்திய நாட்டுக்கு ஒரு கெடு விதிச்சிருக்கு. இந்த வருட கடைசி வரை டைம்
கொடுக்கறேன். அதுக்குள்ள ஒப்பந்தத்துல கையெழுத்து போடுங்கன்னு.

எதற்காக அந்த நாடு இவ்வளவு அவசரப்படனும்னு எனக்கு விளங்க மாட்டேங்குது. இல்லை
ஒரு வேளை அந்த நாளுக்குள்ள கையெழுத்து போடலைன்னா திரும்பவும் ஒரு ஆறு மாசம்
கெடு கொடுக்கும் போல இருக்கு. ஏன்னா இதுல அந்த நாட்டுக்கு இந்த ஒப்பந்தம் மூலமா
இந்தியாவை எந்த அள்வுக்கு சுரண்டலாம்ங்கற கணக்கு தெரிஞ்சி இருக்கு. ஆனா இந்த
காங்கிரஸ் தலைவர்களுக்கு என்ன பின் வாசல் லாபமோ இப்படி விவாதம் எதுவும் இல்லாம
இந்த ஒப்பந்தத்தை நிறைவேத்த கங்கனம் கட்டிக்கிட்டு அலையறாங்க. இதுமாதிரியான
நீண்ட கால ஒப்பந்தங்களுக்கு ஜனநாயக நாட்டில் உயரிய அமைப்பான பாராளுமன்றத்துல
ஒரு விவாதம், ஒரு ஓட்டெடுப்பு இல்லாம காரியம் சாதிச்சிடலாம்னு நினைச்சா அதுக்கு
பெயர் ஜனநாயகம் இல்லை சர்வாதிகாரம். அதுக்கு உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு
என்கிற போலி முகமூடி தேவையில்லை. அமெரிக்காவும் ஜனநாயகம் எங்கெங்கே
செத்துட்டாலும் அங்கன நாங்க உயிர் கொடுப்போம்னு அலையறாங்க. அவங்களுக்கு
இந்தியாவுல நடக்கற சர்வாதிகார ஆட்சி கண்ணுக்கு தெரியலையோ? இல்லை தெரிஞ்சும் சுய
லாபத்துக்காக கண்டுக்காம அமைதியா இருக்கோ எதுவும் புரியலை.

ஒன்னு மட்டும் புரியுது சுமார் 25 வருடத்துக்கும் மேலா எந்த ஒரு அணு
மின்னுலையையும் நிறுவாத நாட்டிலிருந்து அதன் மேல நம்பிக்கை இழந்த நாடு கூட நாம
ஒப்பந்தம் போடுவது அவங்களுக்கு ஒரு சோதனை சாலையை ஏற்படுத்திக்கொடுக்கதான்னு.
அதுக்கு ஆதரவா ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் கூட்டம் ஒன்று இங்கு சுற்றுப்பயணமே
மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு அவர்களின் நலன் மட்டுமே பெரிசா தெரியுது. என்னடா
ஒரு நூறு கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை இப்படி அணிசாரா நாடுங்கற அந்தஸ்துல
இருந்து இந்தியாவை மாத்தி போர் அபாயத்துல சிக்க வச்சி(ஏன்னா அமெரிக்கா
இந்தியாவை சீனாவுக்கு எதிரான சக்தியாதான் பாக்குதாம் - கண்டு சொன்னவரு அறிவு
ஜீவி சோ. இராமசாமி அவர்கள்) அவங்க அமைதியை கெடுக்க துணை போகறோமேங்கற உறுத்தல்
கொஞ்சமும் அவங்களுக்கு இல்லை. அது மட்டுமில்லை அமெரிக்கா எந்த நாட்டின் மீதாவது
நடவடிக்கை எடுத்தா நாம உற்ற தோழனா தோள் கொடுக்கனுமாம். அவங்க சுயநலத்துக்கு
யார்மேலாவது படையெடுத்தா சம்மந்தமில்லாம இந்தியன் போயி சாகனுமாம். அவங்களுக்கு
இப்ப நாம இருக்கற அமைதியான நிலை பிடிக்கலை போல இருக்கு.

அப்புறம் அமெரிக்க தேசத்துக்கு மட்டுமே எனர்ஜி செக்க்யூரிட்டி அப்படின்னு
சொல்லற ஆற்றல் பாதுகாப்பு வேண்டுமாம். நாம ஈரான் கூட அமெரிக்க குறுக்கீடு
மற்றும் தரகுத்துவம் இல்லாமல் பாகிஸ்தான் வழியா எரிவாயு வாங்க கூடாதாம் அதனால்
நம்ம எனர்ஜி செக்யூரிட்டி அதிகமாயி நம்முடைய சுயசார்பு அதிகமாயிடுமாம். இதனால்
வருகின்ற பணத்தை வச்சி ஈரான் அணு ஆயுதம் தயாரிச்சி அமெரிக்கா மேல போடுமாம். இது
முற்றிலும் தோல்வியடைஞ்ச சி.ஐ.ஏ. வின் புதிய கட்டுக்கதை. திரைக்கதை, வசனம்,
டைரக்ஷன், இசையமைப்பு மற்றும் இத்யாதி இத்யாதி பலகலை மன்னன் ஆல் இன் ஆல்
அழகுராஜா புஷ். இதை பத்தி ஜுனூன் புகழ் கேசவ் கல்சி என்ன சொல்றாரு - "அது வந்து
தாத்தா சார் அமெரிக்கா சார் என்ன சொல்லறாருன்னா ஈரான் எரிவாயு திட்டத்தை
இந்தியா கைவிடனும் அப்படின்னு."

அதுக்கு மாற்றா சவுதி அராபியாவுல இருக்கற ஷெல் நிறுவன கட்டுப்பாட்டுல இருக்கற
எரிவாயு வள இடத்தில இருந்து கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியா தலையை
சுத்தி மூக்கை தொட்டு அப்புறமா சாப்பிடறா மாதிரி ஒரு திட்டம் இருக்காம்.
அதுக்கு இந்தியா பணம்போட்டு ஸ்பான்ஸர்பன்னி அதை கொல்கொத்தாவரை அமைச்சி
பராமரிச்சி அதுக்கும் அந்தாண்ட இருக்கற இந்தோநேசியா வரை அந்த பழுப்பை
கொண்டுபோயி ஷெல் நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க வழி செய்து கொடுக்கனுமாம்.
என்ன இந்திய வரி கட்டுவோரே உங்க பணம் எங்க போவுதுங்கற அக்கரை உங்களுக்கு
இருந்தா கொஞ்சமாச்சும் அந்த உணர்வு இருந்தாக்கா அணு ஆயுத ஒப்பந்தத்தை
எதிர்க்கின்ற குழுவுல இப்பவேஇணைஞ்சிக்கங்க.

இதெல்லாம் தேச நலன்களாம்.(ஒரு வேளை அமெரிக்க தேச நலனோ). இதை
எதிர்ப்பவர்களெல்லாம் இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத எதிரிங்களாம்.(ஷெல்
நிறுவன வளர்ச்சிக்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்
அருமை மகாஜனங்களே. ரிலையன்ஸுக்கு போட்டு கொடுத்தாலாவது பணம் இந்தியாவுலையே
சுத்திக்கிட்டிருக்கும். ஆனா நம்ம பணத்துல வெளிநாட்டுகாரனுக்கு பைலைன்
போட்டுக்கொடுத்து அவன் வளந்துக்குவானாம். நாம லாலிபாப் சாப்பிட்டு
திருப்தியடைஞ்சிக்கனுமாம். என்ன கொடுமை மகாஜானம்சார் இது.)

இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம் நமக்கு தேவையா?