Monday, December 17, 2007

மருந்து விலையில் கொள்ளை

பணம் விழுங்கும் மாத்திரைகள்..!



''ஒருவர், ஒரு பேனாவை ஐந்து ரூபாய்க்கு வாங்கி பத்து ரூபாய்க்கு விற்றால் அவருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்..?”

''ஆறு மாதம் சிறைத் தண்டனை!''

- சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு, ரஷ்யா சென்றிருந்தபோது ஒரு பள்ளி மாணவனிடம் அவர் கேட்ட கேள்வியும், மாணவன் சொன்ன பதிலும்தான் மேலே நீங்கள் படித்தது. அநியாய வியாபாரம் தவறு என்பதை ‘பளிச்’ என்று உணர்த்தும் எளிய உதாரணம் இது!

கழுதைக்கு பெயின்ட் அடித்து குதிரை என்று விற்கும் வில்லங்க வர்த்தகர்களுக்கு இப்போதும், எப்போதும் பஞ்சமில்லை. ஆனால், அவர்கள் உயிர்காக்கும் மருந்துப் பொருட்களை விற்பவர்கள் மத்தியிலும் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்!

இந்திய மருந்துப் பொருட்களின் சந்தையில், ஒரு மருந்தின் உற்பத்தி விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் தலை தட்டாமாலை சுற்றிவிடும். ஒரு ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்படும் மருந்தை பத்து ரூபாய்க்கு விற்றால் அதற்குப் பெயர் பகல் கொள்ளையில்லையா..?

வருடத்துக்கு சுமார் 35,000 கோடி ரூபாய் புழங்கும் இந்திய பார்மா மார்க்கெட்டில் எல்லா மருந்துகளுக்கும் அரசு, அதிகபட்ச விற்பனை விலையை (எம்.ஆர்.பி.) நிர்ணயிக்கவில்லை. மொத்த சந்தை மதிப்பில் நான்கில் ஒரு பகுதி மருந்துகளுக்கு மட்டுமே அரசால் எம்.ஆர்.பி. நிர்ணயிக்கப்படுகிறது. மற்ற அனைத்து மருந்துகளும் இஷ்டம் போல விற்கப்படுகிறது. இந்தப் புள்ளியில்தான் லாபநோக்குடன் செயல்படுபவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.



அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ‘இந்திய மருந்துப்பொருட்கள் விலை நிர்ணய ஆணையம்’ (ழிணீtவீஷீஸீணீறீ றிலீணீக்ஷீனீணீநீமீutவீநீணீறீ றிக்ஷீவீநீவீஸீரீ கிutலீஷீக்ஷீவீtஹ்), அனைத்து-வகை மருந்துப் பொருட்களுக்கும் அதிக-பட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கப் போவ-தாக பேச்சுக் கிளம்பியிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இதற்கான உத்தரவு வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

சுற்றுச்-சூழலுக்கான மருத்துவர்கள் குழு (ஞிளிஷிணி) வின் உறுப்பினரான சென்னை, கல்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் புகழேந்தி மிகுந்த ஆதங்கத்துடன் நம்மிடம் பல விஷயங்களை விவரித்தார்.

''விதவிதமான நோய்கள் பெருகிவிட்டன. சிறியதோ, பெரியதோ... கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் ஒரு நோயாளி இருக்கிறார். தினமும் மருந்து உட்கொள்ளும் அளவுக்கு தீவிரமான நோயாளிகள் யாரும் இல்லை என்றாலும், அவ்வப்போது ஏற்-படும் சின்னச் சின்ன உடல்நலக் குறைவு-களுக்குச் செலவழிப்பதற்கு, ஒரு குடும்பத்-துக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது தேவைப்படுகிறது. உண்மையில் அந்த மருந்துப் பொருட்களின் விலை நூறு ரூபாயைக் கூடத் தாண்டாது. இது அதிர்ச்சி-யளிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை!'' என்றவர், சில உதாரணங்களை அடுக்கினார்.

''சளி பிரச்னையைச் சரி பண்ணக்கூடிய செ ப்ட்ரியோக்ஸின் (சிமீயீtக்ஷீவீணீஜ்ஷீஸீமீ 1ரீ) என்ற ஆன்டிபயாட்டிக் ஊசி, எங்களை மாதிரியான மருத்துவர்களுக்கும், சில்லறை விற்பனை செய்யும் மெடிக்கல் ஷாப்களுக்கும் 21 ரூபாய்க்கு வருகிறது. இதன் எம்.ஆர்.பி. 100 ரூபாய்க்கும் அதிகம். கிட்டத்தட்ட 500 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபம் வருகிறது. இன்னொரு ஆண்டிபயாட்டிக் ஊசியான அமிகாசின் (கினீவீளீணீநீவீஸீ 500னீரீ) எங்களுக்குக் கொடுக்கப்படும் விலை 10 ரூபாய். ஆனால், இதன் எம்.ஆர்.பி. 50 ரூபாய்க்கும் மேல், அதாவது 500%&க்கும் அதிகமான லாபம்! இப்படி பெரும்பாலான மருந்துப் பொருட்கள் மிக, மிக அதிகமான விலை வைத்துதான் விற்கப்படுகிறது. இவற்றின் உற்பத்திச் செலவோடு விற்பனை விலையை ஒப்பிட்டால், லாபத்தின் சதவிகிதம் இன்னும் பல மடங்கு கூடும். சில மருந்துப் பொருட்கள், அதன் உற்பத்தி விலையைக் காட்டிலும் 3000% கூட அதிக விலை வைத்து விற்கப்படுகின்றன'' என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகக் கொடுத்தார்.

''இதையெல்லாம் யாரும் கண்காணிக்க முடியாதா..?'' என்று கேட்டதும் தொடர்ந்தார் டாக்டர் புகழேந்தி.

''இந்திய மருந்துச் சந்தையை, அரசின் கட்டுப்-பாட்டுக்குள் இருக்கும் மருந்து வகைகள், அரசின் கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள மருந்து வகைகள் (சிஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ & ஹிஸீநீஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ ஞிக்ஷீuரீs), உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவரின் பரிந்துரையோடு/பரிந்துரை-யின்றி கொடுக்கக்கூடிய மருந்துகள்.. என்று பல வகைகளாகப் பிரிக்கலாம். இதில் தன் கட்டுப்-பாட்டுக்குள் வரும் மருந்துகள் மற்-றும் உயிர்காக்கும் மருந்துகளின் விற்-பனை விலையை மட்டும்தான் அரசு நிர்ணயிக்கிறது.

ஆனால், சில வருடங்-களுக்கு முன்புவரை 200 ஆக இருந்த அந்த உயிர்காக்கும் மருந்துகளின் எண்-ணிக்கை, இன்று வெறும் 20 ஆகக் குறைந்துவிட்டது. விற்பனை விலையை அரசே நிர்ணயிப்பதால் லாபம் குறைவு என்று கருதி, சில மருந்து கம்பெனிகள் பட்டியலில் இருந்தே மருந்துகளைத் தூக்கிவிட்டன. மீதியுள்ள முக்கால்வாசி மருந்துப் பொருட்களின் விற்பனை விலையை அந்தந்த கம்பெனிகளே நிர்ணயித்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அந்தத் தயாரிப்புகள்தான் ஏராளமாகச் சந்தையில் கிடைக்கின்றன'' என்றார்.

‘ஒரு பொருளைத் தயாரிப்பவரைக் காட்டிலும் அதை விற்பவருக்கு லாபம் அதிகம்’ என்பது விவசாயத் துறையைவிட மருந்துப் பொருட்களின் துறைக்கே அதிகம் பொருந்தும். மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவுக்கு லாபம் வைத்து மொத்த விற்பனையாளர்களுக்கு விற்கின்றன. அவர்களிடமிருந்து சில்லறை விற்பனையாளர்கள் வழியாக மக்களுக்குப் போகிறது. இதில் சில்லறை விற்பனை செய்யும் இடத்தில்தான் அதிக லாபம் பார்க்கிறார்கள்.

அண்மையில் இந்திய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் (ழிறிறிகி) நாடு முழுக்க பன்னிரண்டு நகரங்களில் ஓர் ஆய்வு நடத்தியது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 547 மருந்துகளில் 303 மருந்துப் பொருட்களின் விலை, அவற்றின் உற்பத்திச் செலவைவிட பலநூறு மடங்கு அதிக விலை வைத்து விற்கப்பட்டதும், 80 மருந்துகளுக்கு அரசின் அனுமதி இல்லாமலேயே அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் மருந்துப் பொருட்களின் விலை இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.

டாக்டர் புகழேந்தியுடன் பேசியபோது அவர் சொன்ன இன்னொரு விஷயம் மேலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது!

''இப்படி தாறுமாறாக எம்.ஆர்.பி. நிர்ணயிக்கப்படுவது இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படும் மருந்துகளுக்கு மட்டும்தான். இதுவே வெளிநாட்டு மருந்துகள் என்றால் சில்லறை விற்பனையாளர்களுக்கு குறைந்த அளவு அதாவது நியாயமான அளவுக்கே மார்ஜின் நிர்ணயிக்கிறார்கள். உதாரணத்துக்கு, புகழ்பெற்ற நோவால்டீஸ் மருந்து நிறுவனம், சளி பிரச்னைக்கு டெக்ரிடல் (ஞிமீரீக்ஷீவீtணீறீ 200 னீரீ) என்ற மாத்திரையைத் தயாரிக்கிறது. இதன் ஒரு மாத்திரையின் விற்பனை விலை 1.26 ரூபாய். எங்களுக்கு 1.10 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆனால், மெடிக்கல் ஷாப்களில் இப்படியான லாபம் குறைவாகக் கிடைக்கும் மருந்துகளை ஸ்டாக் வைத்துக்கொள்வதே இல்லை. எப்போது கேட்டாலும் இல்லை என்ற பதில்தான் வரும். ஒரு மருந்தை தனக்கு லாபம் குறைவு என்ற காரணத்தால் அதை விற்பதையே நிறுத்துவது என்பது எத்தகைய கொடுமை என்று பாருங்கள்.



இதற்கு மருத்துவர்கள் தரப்பிலும் உடந்தையாக இருக்கிறார்கள். விலை குறைவான மருந்தைக் கொடுத் தாலே நோய் சரியாகும் என்ற நிலை இருந்தாலும், எந்த மருந்து கம்பெனி தனக்குச் சலுகை தருகிறதோ, அந்த மருந்தையே நோயாளிக்குப் பரிந்துரை செய்யும் தவறை மருத்துவர்களே செய்வது கொடுமை! லாபமே பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. லாபத்துக்கும், கொள்ளை லாபத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே..?'' என்று ஆதங்கமாகக் கேட்டார் புகழேந்தி.

இந்தியாவில் இப்போது பலவித நோய்களும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறினாலும் கண்ணுக்கு தெரியாமல் பரவிக்கொண்டிருக்கும் ஒரு வியாதி ரத்தசோகை. இந்திய கர்ப்பிணி பெண்களில் 88% பேரும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 80% பேரும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அளவுக்கு அதிகமான மக்களைத் தாக்கியிருக்கும் ஒரு வியாதிக்கான மருந்தின் விலை, குறைவாக இருக்க வேண்டும் அல்லது அப்படி குறைவாக விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதன் விலை வருடத்துக்கு வருடம் ஏறிக்கொண்டே இருக்கிறது. மூன்று ஆண்டு-களுக்கு முன்பு 12.50 ரூபாயாக இருந்த ரத்தசோகைக்கான ஊசியின் விலை படிப்-படியாக ஏறி, கடந்த அக்டோபரில் 22 ரூபா-யாக உயர்ந்துவிட்டது.

ஆண்டு ஒன்றுக்கு 8&9% வளர்ச்சி அடைந்து வரும் இந்திய பார்மா மார்க்கெட்டில் 20,000&-க்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் இருக்கின்றன. ஆனாலும் 70% மருந்து விற்பனை, முன்னணியில் இருக்கும் 250 கம்பெனிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

இந்தப் பிரச்னைபற்றி ‘கன்ஸ்யூமர் அசோஸியேஷன் ஆப் இண்டியா’ அமைப்பின் அறங்காவலரான தேசிகனிடம் கேட்டோம். ''உலகத்தின் அதிகபட்ச டயாபடீஸ் நோயாளிகள் இருப்பது இந்தியாவில்தான். எய்ட்ஸ் நோயாளி-களின் எண்ணிக்கையில் நமக்குத்தான் இரண்-டாமிடம். உலக டி.பி. நோயாளி களில் 33% பேர் இந்தியர்கள். வயிற்றுப் போக்குப் பிரச்னையால் ஒவ்வொரு வருடமும் 19 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என இந்தியா நோய்களின் கூடாரமாகவே மாறிவிட்டது. இன்னும் ஐந்து ஆண்டு-களில் இந்திய மக்கள் தொகையில் 15% பேர் டயா-படீஸ் நோயாளிகளாக இருப்பார்கள் என்றும், எய்ட்ஸில் முதலிடத்தை எட்டிவிடுவோம் என்றும் சொல்லப்படுகிறது. ஆக, உலக மருந்துச் சந்தையின் டார்லிங்காக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. இப்போது 35,000 கோடிகளாக இருக்கும் இந்திய மருந்துச் சந்தையின் மதிப்பு இனிமேல் கூடிக் கொண்டேதான் போகும். ஆனால், மருந்துகளின் உண்மை-யான விலையைக் கணக்கில் கொண்டால், இந்த மதிப்பு இப்போது சொல்லப்படுவதில் பாதியளவு கூட இருக்காது. குடும்ப பட்ஜெட்டில் மருந்துக்கும் நிதி ஒதுக்கவேண்டிய இன்றைய காலத்தில், அரசு உடனடியாக மருந்துப் பொருட்களின் விலைக்குக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

இப்போதுள்ள விலை நிர்ணய முறையைத் தவிர்த்து, அனைத்து வகையான மருந்துகளுக்கும் ஒரே விதமான விற்பனை விலை நிர்ணயம் செய்யப்-போவதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி மொத்த விற்பனையாளர்களுக்கு 10% மார்ஜினும், சில-லறை விற்பனையாளர்களுக்கு 20% மார்ஜினும் நிர்ணயிக்-கப்படலாம். அதன் விளைவாக, எல்லா மருந்துகளின் விலையும் உடனடியாகக் குறையும் என்கிறார்கள். இது எந்த அளவுக்கு சரி என்பதை அறிய, 23,000 உறுப்பினர்களைக் கொண்ட ‘தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்க’த்தின் மாநிலச் செய-லாளர் அருள்குமாரைச் சந்தித்தோம்.

''கட்டுப்படுத்தப்பட்ட மருந்து, கட்டுப்-பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள மருந்து (சிஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ, ஹிஸீநீஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ ஞிக்ஷீuரீs) என்ற இரண்டு பெரிய பிரிவுகளுக்குள் ஒட்டுமொத்த இந்திய மருந்துச் சந்தையையும் அடக்கிவிடலாம். இதில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கான மார்ஜின், மொத்த விற்பனையாளர்களுக்கு 8%&ஆகவும், சில்லறை வியாபாரிகளுக்கு 16%&ஆகவும் இப்போது உள்ளது. இந்த மார்ஜின் அளவு, கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள மருந்துகளுக்கு, 10 மற்றும் 20 சதவிகிதமாக உள்-ளது. இதுதான் இப்போதைய நிலைமை. நடக்கப்போவதாகச் சொல்லப்படுகிற மாற்றம் பற்றி அரசே இன்னும் ஒரு இறுதியான முடிவு எடுத்ததாகத் தெரிய-வில்லை. மார்ஜின் லெவலைக் குறைப்பதாகச் சொல்வது எங்களை மாதிரியான வியாபாரிகளுக்கா, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கா என்பதும் தெளிவாகவில்லை'' என்றவர், வேறு சில விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

''இந்திய மருந்துச் சந்தையில் 40% கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள்தான். இவற்றின் விலையை அரசே முடிவு செய்துவிடுகிறது. மீதியுள்ள மருந்துகளின் விலை-யைத்தான் கம்பெனிகள் தீர்மானிக்கின்றன. இதில் சில்-லறை விற்பனையாளர்களுக்கு மட்டும் அதிக மார்-ஜின் நிர்ணயிக்கப்படுவது உண்மைதான். அதன் காரணம், ஒரு மெடிக்கல் ஷாப் நடத்துவதற்கான செலவுகள் மிக அதிகம் என்பதுதான். அந்த மார்ஜின் லெவலைத் தாண்டி அதாவது எம்.ஆர்.பி&யை விட அதிகமான விலைக்கு விற்றால் எங்கள் மீது தவறு சொல்லலாம். நிஜத்தில், இப்போது தெருவுக்குத் தெரு பெட்டிக்கடை போல மெடிக்கல் ஷாப்கள் வந்துவிட்டதால், வியாபாரப் போட்டி காரணமாக மார்-ஜின் லெவலைக் குறைத்துதான் எல்லோரும் விற்-கிறார்கள். மற்றபடி லாபம் குறைவாகக் கிடைக்கும் மருந்துகளை ஸ்டாக் வைத்துக்கொள்வதில்லை என்ப-தெல்லாம் பொய்...'' என்றார்.

அரசு மனது வைத்து மருந்துகளின் விலையைக் குறைத்தால், நிச்சயமாக மாத பட்ஜெட்டில் பெரும் தொகை மீதமாகும். அதைக்கொண்டு இன்னும் முறையாகத் திட்டமிட்டுச் சேமித்து முதலீடு செய்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். மனம் வைக்குமா அரசு!

3 comments:

said...

இதெல்லம் ஒரு பிரச்சினையா? அமைச்சர் அன்புமனிக்கு வேனு கோபாலோட சண்டை போடனும். அப்புறம் மாண்வர்கள் வாழ்க்கையோட விளையாடனும்.

said...

அப்புறம் அவங்க தமிழ் வளக்கறோம்னு சொல்லிக்கிட்டே அவங்க பசங்களை மாற்று மொழி கல்வி கத்து தரனும்,

மரங்களை வெட்டி நடு ரோட்டுல போடனும் இதுக்கே அவருக்கு நேரம் போதவில்லை.

said...

நன்றி டால்ஃபைன்.