Thursday, January 17, 2008

ப. சிதம்பரத்துக்கு பாரத ரத்னா விருது பரிந்துரை

நாட்டில் அவரவருக்கு பிடித்த தலைவருக்கு அவரவர் பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏதோ எனக்கு பிடித்த இந்திய தலைவருக்கு நானும் பரிந்துரைக்கலாம் என்று நேற்று முழுக்க மல்லாக்க படுத்து யோசித்து பார்த்ததில் ஒரு ஒப்பற்ற தமிழர் ஒருவர் என் மனதில் தகுந்த காரணங்களுடன் தோன்றினார். அவ்ர் குறித்து என்க்கு தோன்றியவை


நம் இந்திய நாட்டில் கீழ்கண்ட வற்றில் அபரிமிதமான முன்னேற்றத்திற்காக உழைத்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க நான் ஆதரிக்கின்றேன்

1. 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை புரிந்துகொள்ளூம் வகையில் திட்டங்களை திட்டமிடு வடிவமைத்து நாட்டின் மக்கள் தொகை குறைப்பில் மாபெரும் தொண்டாற்றியுள்ளார்.

2. பாகிஸ்தான், இலங்கை, சோமாலியா முதலிய தேசங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு குழந்தைகள் சாவில் இந்தியாவை முன்னனிக்கு கொண்டுவந்து சாதனை படைத்துள்ளார்.

3. 4 கோடி ஏழை இந்தியர்களின் காய்கறி விற்கும் உரிமையை பறித்து 4 மிகப்பெரிய பணக்காரர்களை உருவாக்கி பெரும் தொண்டாற்றியுள்ளார். இதனால் 18 லட்சம் பேருக்கு புதியதாக வேலைவாய்ப்பும், 2 கோடி பேருக்கு உடனடி வேலை இழப்பும் ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

4. பங்கு சந்தை சரியும்போதெல்லாம் குரல்கொடுத்து அதை மட்டும் வளர்த்தும், விவசாயிகள் தற்கொலையின் போதும், விவசாய பொருள்களின் உற்பத்தி குறைவின் போதும் கணாமலும் இருந்தும் பட்ஜெட்டில் காகிதத்தில் மட்டும் விவசாயத்தை வளர்க்க உறுதியளித்தும் தொண்டாற்றியுள்ளார்.

5. வறுமைக்கோட்டிற்கான அடிப்படை மாத வருமானத்தை 1990 இலிருந்து தொடர்ந்து ரூ.500 லேயே நிலைநிறுத்தி வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளை 27% ஆக குறைத்து சாதனை படைத்துள்ளார்.

6. அவரது தொகுதியிலேயே குறைந்த பட்ச வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய 80ரூ தினக்கூலியை ரூ60 ஆக குறைத்து வழங்கி மக்களுக்கு ஒப்பற்ற சேவையாற்றியுள்ளார்.(இதில் ரூ.20 ஊழல்)

7. நாட்டில் 80% அமைப்பு சாரா தொழிலாளிகளின் தினசரி கூலியை ரூ.20 ஆக பல ஆண்டுகளாக நிலைநிறுத்தி சாதனை புரிந்துள்ளார்.

8. ஊக பேர வணிகத்தில் உணவுப்பொருள்களை உட்படுத்தி நாட்டு மக்களுக்கு திடீரென 3 ஆண்டுகளில் 200% விலையுயர்வை கொடுத்து அற்புதமான சேவை செய்து அதன் மூலம் நாட்டின் ஜி.டி.பி யை உயர்த்தி 9.5% ஜி.டி.பி வளர்ச்சியை உறுதி செய்துள்ளார்.

9. ஏகத்திற்கும் எல்லோருக்கும் வங்கிகளில் கடன் கிடைக்க செய்து பணவீக்கத்தை உயர்த்தி அதன் மூலம் எல்லா பொருள்களின் விலையையும் உயர்த்தி அதன் கணக்கில் ஜி.டி.பி ஐ உயர்த்தி அற்புத சேவைகளை புரிந்துள்ளார்.

இப்படி பல்வேறு காரணங்களுடன் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி ஐயும் பல்வேறு பொருள்களின் விலை உயர்வு மூலம் உயர்த்தி சாதனை படைத்துள்ள தமிழகத்தின் சாதனை நட்சத்திரம், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பங்குசந்தை.சிதம்பரம் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கிட 6 கோடி தமிழர்களின் சார்பில் நான் பரிந்துரைக்கிறேன்.

(ஆட்சேபம் தெரிவிக்க உங்கள் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், எல்லா ஆட்சேபனைகளும் தயவு தாட்சன்யமின்றி நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது).

11 comments:

said...

பாரத ரத்னா வழங்கிட 6 கோடி தமிழர்களின் சார்பில் நான் பரிந்துரைக்கிறேன்.

(ஆட்சேபம் தெரிவிக்க உங்கள் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், எல்லா ஆட்சேபனைகளும் தயவு தாட்சன்யமின்றி நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது).

6 கோடி தான் இருக்கோமா அங்கிள்...சரி நிராகரிக்கப்படும்னு சொல்லறிங்க...

said...

இன்னும் அவர் செய்த/செய்ய துடித்துக் கொண்டிருக்கிற மகத்தான சேவைகளையும் சேர்த்துக் கொள்ளவும்.
1. காப்பீடுத்துறையில் தனியார் பங்கு
2. அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அவரது சொற்பொழிவுகள்
3. நோவார்டிஸ் கம்பெனியின் சார்பில் வாதாடிய அவரது தேசாபிமானம்
மற்றும் பல....

வாழ்க இந்தியா...

said...

(ஆட்சேபம் தெரிவிக்க உங்கள் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், எல்லா ஆட்சேபனைகளும் தயவு தாட்சன்யமின்றி நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது).

:) ;) ') ")

said...

நாம வளர்ந்துகிட்டே இருக்கோம்டா பவன் செல்லம். இப்ப குன்ஸா 6 கோடி பேருதான் இருக்கோம். நீ பெருசானா எப்படியும் நீயுன் உன் பங்குக்கு கொஞ்சம் சேத்தா 12 கோடி ஆயிடும்.

said...

சின்னப்பையன் அவர்களே,

காப்பீடு துறையில் அவர் சேவை புஸ்வானமாகிவிட்டது. மகாராட்டிரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனம் தடை செய்யபட்டுள்ளது. காரணம் சேவை குறைபாடு.

said...

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கட்டுரையில் பாதி உண்மை பாதி பொய். உதாரணமாக Infant mortalityயில் இந்தியா பின் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால், சிதம்பரம் நிதி மந்திரி ஆக ஆனபின்னால், மோர்ட்டாலிட்டி அதிகரித்திருப்பது போன்ற பிரமையை உங்கள் எழுத்து கூறுகிறது. அப்படி இல்லை. சொல்லப்போனால், 2000இலிருந்து தொடர்ந்து infant mortality வெகுவேகமாக இந்தியாவில் குறைந்து வருகிறது. இப்போது இன்ஃபண்ட் மோர்ட்டாலிட்டி ஆயிரத்தில் 34. பாகிஸ்தான் சோமாலியா போன்ற நாடுகளை விட இது மிக மிக குறைவு.

நீங்கள் எழுதும்போது ஆதாரத்துடன் எழுதுங்கள். ஆகவே, நீங்கள் கூறுவதை சரி பார்க்க உதவும்.

அடுத்தது, நீங்கள் இன்றைய ஆட்சியாளர்களை குறைகூறுவது என்பது வேறு, அதனை பொதுவுடமை என்று வேஷம் கட்டிக்கொண்டு, பொதுவுடமை ஆதரவாளராக கூறுவது என்பது வேறு.

நன்றி

said...

அன்பு தமிழ்மணி அவர்களே,

இந்தியா பாகிஸ்தான், இலங்கை, சோமாலியாவை விட பின் தங்கி இருப்பது ஆதாரமில்லாமல் இருப்பதாகவும் இப்பொழுது நல்ல நிலையில் இருக்கின்றது என்றும் கூறியுள்ளீர்கள்.

இந்த கட்டுரை ஜூனியர் விகடனில் கிடைத்தது. எழுதியவர் சட்டசபை உறுப்பினர் இது எனது செய்திக்கு ஆதாரம்.
http://pothuvudaimai.blogspot.com/2007/11/blog-post_22.html

அதுமட்டுமல்ல பட்டினி சாவுகள் குறித்த கட்டுரை இடம்பெற்றுள்ள இணைய தளம் http://pothuvudaimai.blogspot.com/2007/11/blog-post_22.html

said...

மேலும் சில ஆதாரங்கள்
http://www.financialexpress.com/old/fe_full_story.php?content_id=143372

IFPRI அறிக்கை
http://www.ifpri.org/pubs/ib/ib47.pdf

said...

பாகிஸ்தான், சோமாலியாவை விட இந்தியா நல்ல நிலையில் இருக்கிறது என்கிற உங்கள் கூற்றில் உண்மையில்லை என்பதே உண்மை என்று அந்த அறிக்கைகள் சுட்டுகின்றன.

சரி நீங்கள் ஏதேனும் ஆதாரங்கள் உங்கள் கூற்றுக்கு ஆதரவாக இருந்தால் தாருங்கள் உண்மை உணர்ந்துகொள்ள உதவியாக இருக்கும்.

said...

இந்த வலைப்பூவினை மேலும் மேம்படுத்த வழிகாட்டி உதவுங்கள். இதை இதையெல்லாம் பொதுவுடைமையாக எழுதுங்கள். இதை இதை தவிர்க்கவும் என்கிற ரீதியில் உங்கள் பரிந்துரைகளை தாருங்கள் ஒரு சிறிய விவாதத்திற்கு பிறகு இந்த வலைப்பூவை மாற்றுகிறேன்.

பரிந்துரைக்கும் போது சில தற்போதைய நோக்கங்களையும் கவனத்தில் கொள்ளவும்.

பொதுவாக பொதுவுடைமையை எழுத அசுரன், ராஜா வனஜ், தியாகு போன்ற பலர் வலைப்பூ வைத்துள்ளனர். அதில் பல பொதுவுடைமை கொள்கைகளை நன்றாக பிரதிபலிக்கின்றேன். ஆகையால் அதுபோல எழுதுவதை தவிர்த்து இந்த வலைப்பூவில் அன்றாட நாட்டு நிகழ்வுகளையும் அதில் ஒளிந்துள்ள உண்மை நிலையையும் சுட்டவே இந்த வலைப்பூவை நான் பயன்படுத்தி வருகிறேன். மேலும் நாடே சோஷலிச காலத்தில்தான் கெட்டு குட்டிசுவரானதுபோல ஒரு பிரம்மையை உருவாக்க நிறைய ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் முயன்று வருகின்றார்கள். அவர்கள் எல்லோரும் இந்தியா சோஷலிசம் கடைப்பிடித்த போது பெற்ற கல்வியை மறந்த ுவிடுகின்றனர். சோஷலிச கல்வி முறையை இந்தியா பின்பற்றாதிருந் திருந்தால் நிறைய பேருக்கு கல்வியறிவு என்பது இன்னமும் குருகுல அறிவாகவே இருந்திருக்கும். இவ்வாறு அடிப்படையை சோஷலிச கல்வியில் பெற்றுக்கொண்டு ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது போல அறுவடையை இப்பொழுது பெறும்போது ஏதோ நவீன பொருளாதாரம்தான் எல்லாவற்றையும் கொண்டுவந்து குவிக்கின்றது என்கிற மன நிலையையும் மாற்றி உண்மையை உரைப்பதன் நோக்கமே இந்த வலைப்பூ. இதனையும் மனதில் கொண்டு ஆலோசனை வழங்கவும்.

said...

இதோ இன்னொரு ஆதாரம்

http://www.livemint.com/2007/10/13021027/India-ranks-94th-in-global-lis.html